ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளையின் சார்பில் இன்று 31.03.2022 சரியாக காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை
“இலவச மருத்துவ முகாம்” நடைபெற்றது. நிகழ்ச்சியை திருமதி தேவி மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். வருகைதந்த மருத்துவர்களை வரவேற்று பேரவையின் முன்னாள் தலைவர் திரு R. புகழேந்திரன் வரவேற்று பூங்கொத்து வழங்கினார். அறங்காவலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ குழுவினருக்கு சிறப்பான வரவேற்பையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 117 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு V. செல்வராஜு மற்றும் ரெட்டி இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு V. ஜெயகுமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு R. காமராஜ் திரு. D. மணிவாசகன் திரு. K. ரங்கராஜன் திரு. P. ஜெயக்குமார் மற்றும் பேரவை உறுப்பினர்கள் திரு.R.ராஜசேகர் திரு.A. குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியின் போது ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் கே.ஆர்.டி. கேரியர் அகாடமியில் தற்பொழுது குரூப்-II வகுப்புகள் தொடர்ந்து சிறப்பாக தொய்வின்றி நடைபெறவும், இனி குரூப்-IV வகுப்புகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டும் ஏற்படும் அன்றாட நடைமுறை செலவை சமாளிக்க திருமதி தேவி மோகன் அவர்கள் ரூபாய் 2,50,000/- நன்கொடை வழங்கினார். இதனைத்தொடர்ந்து திரு. ஆர். புகழேந்திரன் அவர்கள் ரூபாய் 25,000/- வழங்குவதாக அறிவிப்பினை வெளியிட்டார். நிறைவாக பார்வை குறை கொண்ட மாணவி ஆர்.காவியா அவர்களின் ஹாஸ்டர் செலவுக்கு ரூபாய் 25,000/- நம் அறக்கட்டளையின் அறங்காவலர் கோவை சின்னபண்ணை திரு.எஸ் மோகன் அவர்கள் கடந்த 09.03.2022 அன்று, அறக்கட்டளை கணக்கில் செலுத்தியதற்கும் தற்பொழுது திருமதி தேவி மோகன் அவர்கள் அளித்த நண்கொடைக்கும்,திரு ஆர். புகழேந்திரன் அவர்களுக்கும் நிர்வாக அறங்காவலர் திரு. வீ.செல்வராஜு தெரிவித்து கொண்டார்.
நிறைவாக கே.ஆர்.டி. அகாடமியில் பயிற்சி எடுத்து வரும் மாணவ,மாணவிகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.