கொரானா காலகட்டத்தில் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையின் ஒப்பற்ற பணிகள்.

        சென்னை ஜாபர்கான் பேட்டையில் இயங்கி வரும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை மூலம், கொரானா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக பல்வேறுபட்ட  உதவிகளை செய்து வருகிறோம். கொரானா தொற்றுக்கு எதிராக சமூக ரீதியாக, ஒவ்வொரு வரும் நம்மை தனிமை படுத்திக் கொள்வது என்பது இருந்தாலும், உணர்வு பூர்வமாக மக்களுடன் ஒன்று பட்டு நிற்க வேண்டும், நிவாரண நடவடிக்கைகளில் ஊக்கமாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்து  ஓ.பி.ஆர். அறக்கட்டளை ஊக்கமாக பணியாற்றியது. 

நடவடிக்கைகள்:-

1).COVID-19 நோய் தொற்று பரவலை தடுக்க பல கட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் ஊரடங்கு காலத்தில் பெரும் துயரத்தை அனுபவித்தனர். அவர்களின் அன்றாட தேவைக்கும்,பசிக் கொடுமையை போக்கு வதற்காகவும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம்  கண்டு அறக்கட்டளை சார்பில்சுமார்1500க்கும் அதிகமான குடும்பங்களுக்கு ௹பாய் பத்து லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள மளிகை பொருள்களை இலவசமாக ஓ.பி.ஆர். அறக்கட்டளையின் மூலம் வழங்கியுள்ளோம். இத்துடன் முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரானா நோய் தொற்றை தடுப்பதற்காக நிவாரண உதவி பொருட்களும் வழங்கபட்டது. இதற்கு தாராள மனம் படைத்தவர்கள் குறிப்பாக 136 பேர் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற பங்களிப்பை நிதியாகவும்  பொருளாகவும் அறக்கட்டளைக்கு வழங்கி உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பாக மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆன்லைன் வகுப்புகள்:-

2).மாணவர்களிடையேகல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் +2க்கு பிறகு“என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் ” என்கிற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மிகச்சிறந்த கல்வியாளர் களைக் கொண்டு  நடத்தியுள்ளோம். இந்நிகழ்ச்சியில் பிரபல கல்வியாளரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான திரு.Dr.R ராஜராஜன் மற்றும் திருச்சி காவேரி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை விரிவுரையாளர் திருமதி. Dr.K.கவிதா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ மாணவியருக்கு உயர்கல்வி குறித்து சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி சம்மந்தமான பல்வேறு சந்தேகங்களை தீர்த்து வைத்தனர்.மேலும் எதிர்காலத்திற்கான நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.Zoom மூலம் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 2604 மாணவ மாணவியர் பதிவு செய்து இதில் நேரடியாக காணொளி மூலம் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தெலுங்கு மொழி  வகுப்புகள்:- 

3).சென்னையில் பிரபல தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியில் பணியாற்றிவரும் தெலுங்கு பண்டிட் Dr. பாபு அவர்களைக் கொண்டு நம் தெலுங்கு மொழி அடையாளத்தை மீட்டெடுக்க இலவசமாக தெலுங்கு மொழி கற்பிக்கும் வகுப்புகள்  கடந்த 17.05.2020 முதல் இன்றுவரை தொடர்ந்து அறக்கட்டளை மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் இழந்துவிட்ட தம் தாய்மொழியை மீண்டும் பேசும் வாய்ப்பை இந்த அறக்கட்டளை உருவாக்கி தந்த தற்காக நன்றி தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது  தெலுங்கு மொழி பேசும் மக்களின் பாதுகாவலர் பேராசிரியர் Dr.CMK.ரெட்டி அவர்கள் உதவியுடன் இந்த தெலுங்கு மொழி கற்பிக்கும் வகுப்புகள் இலவசமாகவும் மிக சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது. 

4)கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவி:- 

 I).திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் +2 மாணவி எஸ். இந்துமதி. இவர் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு580 மதிப்பெண் பெற்றுள்ளார். தமது தந்தையை இழந்த இந்த ஏழை  மாணவியின் கல்விக்கு உதவும் வகையில் இவரின் கோரிக்கையை ஏற்று CA பட்டய கணக்கர் பட்ட படிப்புக்கான முழு கல்விச் செலவையும் ஓ.பி்.ஆர் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது.மேலும் இவரது முதல் பருவ கல்லூரி கட்டண தொகை ௹ 25,000/- ம் செலுத்தி உள்ளது. 

II).ஈரோடு மாவட்டம் பவானியை பூர்வீகமாகக் கொண்டு, தற்பொழுது குமாரபாளையத்தில் வசிக்கும் கண் பார்வை இல்லாத மாணவி R.காவியா. இவர் +2 தேர்வில் 600க்கு 571 மதிப்பெண் பெற்று மாநில அளவில் கண் பார்வை இல்லாத மாணவ, மாணவிகளில் முதலாவது இடத்தை பெற்றவர். இத்தகைய சிறப்புக்குரிய ஏழை மாணவியின் முழு கல்விச் செலவையும் தற்போது ஓ.பி.ஆர். அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது. இவர் IAS அதிகாரியாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் கனவு நனவாகும் வரை ஓ.பிஆர் அறக்கட்டளை இவருக்கு உதவும்.

III). 600 க்கு 570 மதிப்பெண் பெற்ற கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூரை சேர்ந்த  இ.சஞ்ஜய் என்ற ஏழை மாணவர் அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் அவரது கல்வி கட்டணத்தை  பட்ட படிப்பு முடிக்கும் வரை ஏற்பதாக ஓ.பி்.ஆர். அறக்கட்டளை அறிவித்திருக்கிறது.

 5). மக்கள் மத்தியில் காவடி சிந்து பாடல்களை கொண்டு சேர்க்கும் பணிக்கு ஊக்க பரிசு:-

கொரானா காலகட்டத்தில் பலரும் பல்வேறு வகையில் தங்களை சமூக பணிகளில் ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மோனிகா ரெட்டி  திருமண தகவல் மையம் “காவடி சிந்து” புகழ் அண்ணாமலை ரெட்டியார் பாடல்களை மக்கள் மத்தியில் பிரபல படுத்தி வருகிறது. இந்நிறுவனம் செய்து வரும் சேவையை ஊக்க படுத்தும் விதமாக, குழந்தைகளுக்கு என அவர்களால் நடத்தப்பட்ட காவடி சிந்து பாட்டு  போட்டியில் கலந்து கொண்ட ஏராளமான குழந்தைகளில் 15 பேருக்கு தலா ௹ 1000/-வீதம் ஆறுதல் பரிசாக மொத்தம் ௹15,000/-ஐ  ஓ.பி்ஆர்.அறக்கட்டளை சார்பாக வழங்கி இருக்கிறோம். இதன் மூலம் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காக்கும் பணியை செய்து வருபவர்களை ஊக்க படுத்தும் பணியிலும் ஓ.பி.ஆர்.அறக்கட்டளை தம்மை முழுமையாக இணைத்து கொண்டு செயல்பாட்டுவருகிறது.

6). ஏழை மாணவிகளுக்கு  ஸ்மார்ட் போன் :-

ரெட்டியார் சமுதாய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் கல்வியின் மூலம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக திருச்சியில்  தொண்டுள்ளம் கொண்ட 48 ரெட்டியார்கள் ஒன்றினைந்து  “ரெட்டி கல்வி அறக்கட்டளை” யை 1985ல் உருவாக்கி அதன் மூலம் தன்னாட்சி அந்தஸ்தை பெற்ற காவேரி மகளிர் கல்லூரியை சிறப்பாக நிர்வகித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் கல்லூரி முதல்வர் Dr.V.சுஜாதா அவர்கள் அண்மையில் ஆன்லைன் வகுப்பில் ஸ்மார்ட் போன் இல்லாமல் ஏழை மாணவிகள் 500 பேர் கல்வியை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களு க்கு தன்னார்வளர்கள் தாராளமனதுடன் உதவ முன்வர வேண்டும் என டைம்ஸ் ஆப் இன்டியா பத்திரிகையில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கோரிக்கையாக செய்தி வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை ஏற்றுக் கொண்ட  நமது ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை 50 ஏழை மாணவிகளுக்கு 50 ஸ்மார்ட் போன் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மொத்த மதிப்பு ₹ 4,00,000/- (ரூபாய் நான்கு லட்சம்).  இதனை ஏழை மாணவிகளுக்கு வழங்க தற்போது அறக்கட்டளை 50 ஸ்மார்ட் போன்களை வாங்குகிறது. இவை அனைத்தையும்  கல்லூரி முதல்வரிடம் வரும்12.08.2020 புதன் கிழமை அன்று வழங்குகிறோம். இதன் மூலம் 50 ஏழை மாணவிகள் தடையின்றி தனது கல்வி பயணத்தை தொடர முடியும். அறக்கட்டளைபணிகளுக்கு  ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி!.!.!.பணிகள் அனைத்தும் தனிமனித முயற்சி அல்ல. இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இது பலரின் உழைப்பு, பலரும் தாராளமாக அளித்து வரும் நன்கொடையும் ஒத்துழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம். இது தான் நம் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பும் அங்கீகாரமும் ஆகும். இதில் ஒவ்வொரு வரின் பங்களிப்பும் உள்ளது. இது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் இந்த அமைப்பின் மூலம் எதிர் காலத்தில் ஏழை  குழந்தைகள் கல்வியின் மூலம் முன்னேற்றம் காண “KRT Career Academy” தொடங்கபட்டுள்ளது. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இனிவரும் காலங்களில்  தொடர்ந்து கவனம் செலுத்துவோம். பாராட்டுக்குரியவர்கள் நாம் அனைவரும் தான். தனி ஒவ்வொருவரின்உழைப்புக்கும், கருத்துக்களுக்கும் நாம் மதிப்பளிப்போம். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டுவோம். “உறவை வளர்ப்போம் உணர்வை காப்போம்” என நாம் 2006 ல் வெளியிட்ட நம் பிரகடனத்தை தற்போது உள்ளஒவ்வொரு அமைப்பும் சொல்லி வருகிறது. இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. இது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.நம்  அறக்கட்டளை வளர்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. பத்திரிகைகள் தினமணி,  தினமலர், மக்கள் குரல், தனியார் தொலைக்காட்சிகளும் பாராட்டு தெரிவித்து செய்திகள் வெளியிட்டன. 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
வீ.செல்வராஜூ

ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை, 

சென்னை.

e-mail:-oprtrust2020@gmail.com

Cell:9444077722.

 

About the Author

You may also like these